செக்யூரிட்டி வேலையில் இருந்து இதெல்லாம் செய்துள்ளாரா சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி வசந்த்.. அவரே பகிர்ந்த விஷயம்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, சமூக வலைதளங்கள் வந்தாலே இந்த தொடர் குறித்த தகவல்கள் தான் அதிகம் வலம் வருகிறது.
மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் மூலம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் பிரபலமாக வலம் வருகிறார் முத்து என்கிற வெற்றி வசந்த்.
இவர் பேசும் வசனம், லுக் என எல்லாமே ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த சீரியல் மூலம் பிரபலம் ஆகி மலேசியாவிற்கு எல்லாம் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்.
ஆரம்ப காலம்
வெற்றி வசந்த் இப்போது பெரிய அளவில் கொண்டாடப்பட்டாலும் ஆரம்பத்தில் செக்யூரிட்டி வேலை என பல வேலைகள் செய்துள்ளார்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர், இந்த சீரியல் வருவதற்கு முன்பாக சினிமா துறையில் அசிஸ்டன்ட் டைரக்டராகவும், வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட் ஆகவும், செட் அசிஸ்டெண்டாகவும் வேலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
அதேபோல் தளபதி விஜய்யின் சர்கார் படத்தில் எஸ்கார்ட் டீமில் தான் பணிபுரிந்ததாகவும், சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் செட் செக்யூரிட்டி வேலை பார்த்ததாகவும் கூறியிருக்கிறார்.