சிறகடிக்க ஆசை மனோஜ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வசூல் மன்னன் படம்.. எப்போது ரிலீஸ் தெரியுமா
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலை பற்றி தெரியாதவர்கள் தமிழ்நாட்டிலேயே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

விறுவிறுப்பாக செல்லும் இந்த சீரியலில் மனோஜ் என்கிற கதாபாத்திரம் கண்டிப்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும். இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் ஸ்ரீதேவா.
வசூல் மன்னன்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் ரோலில் நடித்து பிரபலமான இவர் இன்று வெள்ளித்திரையில் ஹீரோவாக கால் பதித்துள்ளார். ஆம், ஸ்ரீதேவா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் வசூல் மன்னன்.

இந்த படத்தை வேல் முருகேசன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஸ்ரீதேவாவுடன் இணைந்து வேல ராமமூர்த்தி, சரவண சுபையா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இவர் நடிப்பில் உருவாகியுள்ள வசூல் மன்னன் திரைப்படம் நாளை (மார்ச் 6) திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஸ்ரீதேவா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
இதோ..








