வில்லி வீட்டில் ரோகிணி, மீனா தான் பெரிய முட்டாள்.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
ரோகிணி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்கிற உண்மை எல்லோருக்கும் தெரியவந்த நிலையில் அவரை வீட்டை விட்டு துரத்திவிடுகின்றனர்.
அதனால் அவர் பல தோழிகளிடம் சென்று உதவி கேட்டாலும் யாரும் செய்ய முன்வரவில்லை. இறுதியில் வில்லி சிந்தாமணி தான் அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார். 'நீ என்ன அப்படி தப்பு பண்ணிட்ட. ஒரு சின்ன பொய் சொல்லி திருமணம் செய்தது குற்றமா" என சிந்தாமணி அவருக்கு ஆதரவாக பேசுகிறார்.
அதனால் ரோகிணி அவர் பேச்சை நம்பி அவர் வீட்டில் தங்குகிறார். ஆனால் அவர் போடும் திட்டமே வேறு.

மீனாவை திட்டும் முத்து
மறுபுறம் மீனாவை முத்து வீட்டில் இருக்கும்போது விளாசுகிறார். இந்த குடும்பம் எப்படி போனாலும் பரவாயில்லை என நீ நினைச்சியா. என்னிடம் வந்து சொல்லி இருந்தாலும் என்ன செய்யலாம் என யோசித்து இருக்கலாம் என முத்து திட்டுகிறார்.
ரோகிணி மகன் க்ரிஷ்ஷை எதாவது செய்துவிட்டு தானும் எதாவது செய்துகொள்வேன் என கூறியதால் தான் நான் மறைத்தேன் என மீனா விளக்கம் கொடுக்கிறார்.
ஆனாலும் முத்து அவரை திட்டுகிறார். 'நீ ஒரு முட்டாள். உன்னை எப்படி சொல்லி ஏமாற்றலாம் என ரோகிணிக்கு தெரிந்து இருக்கிறது' என முத்து மேலும் கோபமாக பேசுகிறார்.

அலறும் மனோஜ்
ரோகிணி தன்னை ஏமாற்றிவிட்டதை பற்றி மனோஜ் ஆவேசத்தில் பொங்குகிறார். அவர் தூங்கும்போது எல்லோரும் அவரை சுற்றி நின்று சிரிப்பது போல தோன்றுகிறது.
அதனால் அவர் தூக்கத்தில் அலறுகிறார். அத்துடன் இன்றய எபிசோடு நிறைவு பெற்றது.
