டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று
விஜய் டிவியின் சிறடிக்க ஆசை சீரியலில் இன்றய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். மீனா பூ வியாபாரம் ஒருபக்கம் செய்து வந்த நிலையில் தற்போது fruit பொக்கே செய்யும் தொழிலையும் தொடங்கி இருக்கிறார்
முதல் ஆர்டர் வந்த நிலையில் அதை டெலிவரி செய்ய மீனா செல்கிறார். அந்த நபர் மேலும் இரண்டு ஆர்டர் கொடுக்கிறார். அதன் பின் மீனா வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது வழியில் சீதா மற்றும் அருண் இருவரையும் சந்திக்கிறார்.
டிரைவர் என்றால் கேவலமா
பூ பிஸினஸில் மீனா அடுத்தகட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார் என பாராட்டும் அருண், உடனே முத்துவை அசிங்கப்படுத்தும் வகையில் பேசுகிறார்.
"டிரைவர் வேலையில் என்ன முன்னேற்றம் இருக்க போகிறது, முத்துவையும் உங்க பூ தொழிலுக்கு வந்துவிட சொல்லுங்க" என அருண் சொல்ல மீனா கோபமாக பதிலடி கொடுக்கிறார்.
"டிரைவர் என்றால் கேவலமா, அவர் முதலில் வாடகை கார் ஓட்டினார், தற்போது சொந்தமாக இரண்டு கார் வைத்திருக்கிறார். இன்னும் முன்னேறினால் ட்ராவல்ஸ் வைக்கலாம்" என கூறுகிறார் மீனா.
விஜயாவின் ட்ராமா
அதன் பின் விஜயா தான் ரத்த தான முகம் நடத்தப்போவதாக கூறி வீட்டில் எல்லோருக்கும் ஷாக் கொடுக்கிறார். 'அது நல்ல விஷயம் தான், நீங்க செய்வது தான் ஆச்சர்யமா இருக்கு' என எல்லோரும் கேட்கின்றனர்.
அதன் பின் ரத்த தான முகம் அன்று விஜயா மீடியா கேமரா முன்பு பேட்டி கொடுக்கிறார். தானம் செய்வது தனது ரத்தத்திலேயே இருக்கிறது, அதனால் தான் நான் சமூக சேவை செய்கிறேன் என கூறுகிறார்.
விஜய் பொய் பொய்யாக சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டு எல்லோரும் ஷாக் ஆகின்றனர்.

ஸ்லீவ் லெஸ் அணிந்து மார்கெட் வந்த மாணவி; திட்டிய வியாபாரிகள் - வைரல் வீடியோ காட்சிகள்! IBC Tamilnadu
