மீனா ஸ்கூட்டருக்கு சிக்கல்.. பூக்கடை விஷயத்தில் முத்து மாஸ்டர் பிளான்! சிறகடிக்க ஆசை நாளைய அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா க்ரிஷ் அம்மா யார் என்பது பற்றி தீவிரமாக ஆராய தொடங்கி இருப்பதால் அவரை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என ரோகிணி திட்டம் போட்டு ஒரு விஷயம் செய்கிறார்.
அவர் வில்லி சிந்தாமணி உடன் கூட்டணி சேர்ந்து மீனாவின் அம்மா வைத்திருக்கும் பூ கடையை காலி செய்கிறார். அதனால் கடும் துயரத்தில் மீனாவின் அம்மா சந்திரா இருக்கிறார். அவர் சாப்பிடாமல் கூட இருப்பதை பார்த்த மீனா அவருக்கு ஆறுதல் சொல்லி சாப்பிட வைக்கிறார்.
மறுபக்கம் மீனாவின் மாமியார் விஜயா இந்த விஷயத்திற்காக பிரியாணி பார்ட்டி வைத்து கொண்டாடுகிறார். மீனாவின் பைக்கையும் இதே போல தூக்கிவிட்டால் அவளது வேலையெல்லாம் அப்படியே நின்று விடும் என அவர் ஒரு ஐடியா கூறுகிறார். அப்போது அருகில் இருக்கும் வில்லி சிந்தாமணி இந்த விஷயத்தை கேட்டு உடனே அதையும் செயல்படுத்து தனது ஆட்களுக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறார்.
தனது அம்மாவிடம் பேசும் மீனா இந்த விஷயத்தில் ஏதாவது செய்ய முடியுமா என பார்ப்பதாக முத்து கூறியிருக்கிறார் என சொல்கிறார். அந்த நேரத்தில் வரும் மீனாவின் தங்கை தனது கணவர் அருண் போலீஸ் என்பதால் அதிகாரியிடம் பேசி மீண்டும் கடை வைக்க உதவி செய்வதாக கூறியிருப்பதாக கூறுகிறார். இருவரும் தங்கள் கணவரை விட்டுக் கொடுக்காமல் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
முத்துவின் மாஸ்டர் பிளான்
மீனாவின் அம்மா கடை வைத்திருக்கும் கோவிலின் மேனேஜர் புதிதாக வந்தவர். அவர் கடை வைத்திருப்பவர்களிடம் லஞ்சம் வாங்குகிறார். அதை கொடுப்பவர்களுக்கு மட்டுமே கடை நடத்த விடுகிறார் என மீனாவுக்கு தெரிய வருகிறது. அந்த விஷயத்தை முத்துவிடம் சென்று அவர் கூறுகிறார். அதனால் இந்த விஷயத்தை வைத்து அந்த கோவில் அதிகாரியை மடக்க முடிவு செய்கிறார் முத்து. அதற்காக ஒரு பிளான் போட்டு தனது நண்பரை அந்த மேனேஜருடன் பேச சொல்கிறார்.
அந்த மேனேஜரும் கடை வைக்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டுமென வெளிப்படையாகவே கேட்கிறார். அப்போது முத்து அதை வீடியோ எடுத்து வைத்துக் கொள்கிறார். இது நாளைய ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.