திருமணத்தை நிறுத்திய முத்து.. சிறகடிக்க ஆசை தொடரில் அதிர்ச்சி திருப்பம்
சிறகடிக்க ஆசை தொடரில் ரோகினி - மனோஜ் திருமணம் நடக்குமா நடக்காதா என்பது தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
ரோகிணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது என்ற உண்மையை சொல்லி திருமணத்தை நிறுத்த வேண்டும் என வில்லன் தினேஷ் காரில் வந்துகொண்டிருக்கிறார். அதனால் தான் சிக்கிவிடுவோமே என பயத்திலேயே அமர்ந்திருக்கிறார் ரோகிணி.
திருமணத்தை நிறுத்தும் முத்து
முத்து ஓட்டும் வாடகை காரில் தான் வில்லன் தினேஷ் வந்துகொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி நான் எப்போது கூப்பிட்டாலும் வந்து தான் ஆக வேண்டும், உங்க கூடவும் அவளை ஷேர் பண்றேன், ரூம் மட்டும் போடுங்க என தினேஷ் போனில் நண்பருடன் பேசிக்கொண்டிருப்பதை கேட்டு முத்து கடும் கோபம் அடைகிறார். அவர் வெளியே இறங்கி தினேஷை அடித்து துரத்துகிறார்.
அதன் பின் முத்து திருமணம் நடக்கும் கோவிலுக்கு சென்று சேர்கிறார். அப்போது மீனாவை முத்துவின் அம்மா மோசமாக பேசியதை பற்றி முத்துவிடம் சொல்கிறார்கள்.
அவர் கடும் கோபமாகி கோவிலுக்குள் சென்று திருமணத்தை நிறுத்திவிடுகிறார். அம்மா பேசியது தவறு என சொல்லாவிட்டால் தாலியை எடுத்துட்டு ஓடிடுவேன் என கூறி சண்டை போடுகிறார். அதன் பின் மீனா குறுக்கிட்டு முத்துவை தடுக்கிறார். இந்த திருமணம நடக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
அருண் விஜய்யின் தங்கையா இது? 36 வயதில் வேற லெவல் லுக்