ரோகிணி வாழ்க்கை இப்படி ஆக அவர் அம்மா தான் காரணமா.. வெளிவந்த உண்மை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் வில்லி கதாபாத்திரமான ரோகிணியை சுற்றி தான் மொத்த கதையும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சீரியலில் ரோகிணி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது என்கிற உண்மையை மறைத்து மனோஜை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். தன்னை பற்றிய உண்மை முத்து உள்ளிட்ட குடும்பத்தினருக்கு தெரியவே கூடாது என பல விஷயங்களை செய்து வருகிறார் அவர்.
ரோகிணியின் முதல் கணவரின் சகோதரர் மற்றும் அவர் மனைவி இருவரும் தற்போது சிகிச்சைக்காக சென்னை வருகிறார்கள். ரோகிணிக்கு செய்த பாவத்தால் தான் தங்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போனது என சொல்லி அவர்கள் பேசுகிறார்கள்.

ரோகிணி வாழ்க்கை.. அம்மா தான் காரணம்
அவர்கள் உடன் போனில் பேசும் ரோகிணி அவர்கள் தன்னை பார்க்க வரக்கூடாது, உறவி எப்போது முடிந்துவிட்டது என திட்டுகிறார்.
அதன் பின் அம்மாவிடம் கோபமாக பேசும் ரோகிணி, தனது வாழ்க்கை இப்படி ஆக நீங்க தான் காரணம் என சொல்கிறார். 'எனக்கு பிடிக்காத வாழ்க்கையை கட்டி வெச்சீங்க, அதனால் தான் இப்படி ஆனது என திட்டுகிறார்.
ரோகிணியின் முதல் கணவர் திருமணம் ஆகி சில மாதங்களிலேயே இறந்துவிடுகிறார். அப்போது கணவரின் சகோதரர் மற்றும் மனைவி இருவரும் ரோகிணி 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் பெண் என்று கூட பார்க்காமல் வீட்டை விட்டு துரத்திவிடுகிறார்கள்.
அதற்க்கு பின்னால் தான் ரோகிணி வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதாம். இதை சொல்லி சொல்லி தனது அம்மாவை ரோகிணி திட்டி இருக்கிறார்.

முத்துவிடம் சிக்குவாரா ?
மேலும் ரோகிணியின் முதல் கணவர் உறவினர்களுக்கு முத்து தான் அடுத்த சில நாட்களுக்கு கார் ஓட்ட போகிறார் என்பதை அறிந்து ரோகிணி மேலும் அதிர்ச்சி ஆகிறார்.
ரோகிணி பற்றிய உண்மையை அவர்கள் முத்துவிடம் சொல்லிவிடுவார்களா? வரும் நாட்களில் தான் தெரியும்.