சிறகடிக்க ஆசையில் இப்படி ஒரு ட்விஸ்ட் வருதா? கொந்தளிப்பில் ரோகிணி?
விஜய் டிவியில் தற்போது சிறகடிக்க ஆசை தொடர் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. அதில் தற்போது தன்னை ஏமாற்றிய ஜீவாவிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுவிட்ட மனோஜ் புது தொழில் தொடங்க இருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க ரோகிணி எப்போது வீட்டில் சிக்கிக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
ஜீவா pregnant-ஆ?
மனோஜ் ஆக நடித்து வரும் ஸ்ரீதேவா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் 'என் பெஸ்ட் பிரென்ட் pregnant' என சொல்ல, ரோகிணி கடும் கோபத்தில் துடைப்பதுடன் அடிக்க வருவது போல காட்டப்பட்டு இருக்கிறது.
Permanent என்பதற்கு பதில் pregnant என சொன்னது போல தான் அந்த வீடியோவை காமெடியாக எடுத்து இருக்கின்றனர்.
ஒரு வேலை சிறகடிக்க ஆசையில் இப்படி ஒரு ட்விஸ்ட் நிஜத்திலேயே வந்தால் எப்படி இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.