மீனா சொன்ன விஷயத்தால் கண்ணீரில் சந்திரா.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
Siragadikka aasai serial: சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் விஷயங்கள் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில், மீனா தனது அம்மாவிடம், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறுகிறார்.
சிறகடிக்க ஆசை
ஜாலியாகவும், அதே சமயத்தில் விறுவிறுப்பாக செல்லும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில், முத்துவின் வளர்ச்சியை தடுக்க ராகு போட்ட திட்டம், ரோகிணி, மீனா, ஸ்ருதி சேர்ந்து விஜயாவை விரதம் இருக்க வைத்தது என நன்றாகவே சென்றது.

இதற்கிடையில், கர்ப்பமாக இருக்கும் மீனா இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது அம்மாவிடம் சொல்லவே முடியவில்லையே; ஏதாவது தடங்கல்கள் வந்துகொண்டே இருக்கிறதே என வருத்தத்தில் இருந்தார். இந்த நிலையில், தற்போது மீனாவின் வருத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்து நடக்கவிருப்பது
ஹோட்டலில் மீனாவும், முத்துவும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அதே ஹோட்டலுக்கு மீனாவின் அம்மா சந்திரா, தம்பி சத்யா மற்றும் தம்பியின் மனைவி ரேகா ஆகியோர் சாப்பிட வந்துள்ளனர்.

அந்த சமயத்தில் திடீரென மீனாவிற்கு உமட்டல் ஏற்படுகிறது. இதை பார்த்து பதறும் சந்திரா, மீனாவிற்கு என்ன ஆனது என்று விசாரிக்க வருகிறார். அப்போது, எல்லாமே நல்ல விஷயம்தான், நீங்கள் பாட்டி ஆகப்போகிறீர்கள் என முத்து கூற, ஆனந்த கண்ணீரில் மகிழ்ச்சியடைகிறார் சந்திரா.
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை - பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு! IBC Tamilnadu