ரூம் பிரச்னையை சிம்பிளாக சமாளித்த மீனா.. சிறகடிக்க ஆசை ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ
சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வருகிறது. இந்த தொடரில் முத்து மீனா ஜோடிக்கு வரும் சிக்கல்கள் ஒருபுறம் என்றால், வில்லி ரோகிணி எப்போது வீட்டில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பும் இன்னொரு பக்கம் இருக்கிறது.
தற்போது வீட்டில் வந்திருக்கும் புது பிரச்சனை இரண்டு ரூம்களை மூன்று ஜோடிகளுக்கு மத்தியில் எப்படி பிரிப்பது என்பது தான்.
ஒரு வாரத்திற்கு ஒரு ஜோடி மாறி மாறி வெளியில் படுக்க வேண்டும் என பாட்டி முன்னிலையில் முடிவு செய்கின்றனர். அதனால் மீனா மற்றும் முத்து இருவரும் ரோகிணி இருக்கும் அறைக்கு சென்று தங்க அவர்கள் வெளியில் அனுப்பப்படுகின்றனர்.
சமாளித்த மீனா
இந்நிலையில் சிறகடிக்க ஆசை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகை கோமதி பிரியா சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் டென்ட் உள்ளே இருக்கிறார்.
ரூம் இல்லை என்றாலும் மொட்டைமாடியில் டென்ட் போட்டு முத்து மற்றும் மீனா இருவரும் தங்குவது போல காட்சிகள் அடுத்து வரும் என தெரிகிறது. அதை தான் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
நீங்களே பாருங்க.