7 நாட்களில் சிறை படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விக்ரம் பிரபு
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த இருகப்பற்று, டாணாக்காரன், லவ் மேரேஜ் ஆகிய படங்கள் ரசிகர்களின் மனதை தொட்டது.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம்தான் சிறை. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருந்தார்.
சிறை
இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். மேலும் நடிகை அனிஷ்மா அனில்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 7 நாட்களை கடந்திருக்கும் இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிறை உலகளவில் 7 நாட்களில் ரூ. 10+ கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகியுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan