அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள சிறை படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ
சிறை
கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் சிறை. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்க, இயக்குநர் தமிழ் இப்படத்திற்கு கதை எழுதியிருந்தார்.

விக்ரம் பிரபு இப்படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார் என பேசப்படுகிறது. மேலும் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமாருக்கு இப்படம் சிறப்பான எண்ட்ரியாக மாறியுள்ளது.
அதே போல் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அனிஷ்மா அணில்குமார் இப்படத்தில் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல்
சிறை திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து முதல் நாளில் இருந்தே பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 9 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 9 நாட்களில் உலகளவில் சிறை திரைப்படம் ரூ. 16.5 கோடி வசூல் செய்துள்ளது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர்ஹிட்டாகியுள்ள சிறை படம் இனி வரும் நாட்களிலும் தனது வசூல் வேட்டையை தொடரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri