சிறை - ரெட்ட தல படங்களின் 4 நாட்கள் வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
கடந்த வாரம் வெளிவந்த திரைப்படங்கள் சிறை மற்றும் ரெட்ட தல. இந்த இரண்டு திரைப்படங்களும் நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

சிறை
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் சிறை. இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், நான்கு நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 4.1 கோடி வசூல் செய்துள்ளது.
ரெட்ட தல
இயக்குநர் க்ரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்த ரெட்ட தல திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இப்படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 2.6 கோடி வசூல் செய்துள்ளது.

சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri