சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள்... லிஸ்ட் இதோ
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் இன்றைய கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்து காட்டியுள்ளார். கடந்த வருடம் அமரன் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார், இந்த வருடம் மதராஸி என்ற படம் அவரது நடிப்பில் வெளியாகியுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார், டான் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தயாரித்து வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு அடுத்து பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் நடிகர்களின் லிஸ்டில் சிவகார்த்திகேயன் டாப்பில் இருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் செம வசூல் வேட்டை நடத்திவர இதற்கு முன் நல்ல வசூல் செய்த சிவகார்த்திகேயனின் டாப் 10 படங்களை பற்றி காண்போம்.
- அமரன்- ரூ. 340 கோடி
- டான்- ரூ. 128+ கோடி
- டாக்டர்- ரூ. 102+ கோடி
- மாவீரன்- ரூ. 89 கோடி
- வேலைக்காரன்- ரூ. 83 கோடி
- அயலான்- ரூ. 80 கோடி
- மதராஸி- ரூ. 80 கோடி ( ஓடிக் கொண்டிருக்கிறது)
- நம்ம வீட்டு பிள்ளை- ரூ. 75+ கோடி
- சீமராஜா- ரூ. 60+ கோடி
- ரெமோ- ரூ. 60 கோடி