பெரிய பிரச்சனையில் சிக்கப்போகும் மனோஜ், ரோகிணி.. எச்சரிக்கும் மீனாவின் தாய்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. குறுகிய காலகட்டத்தில் மக்களின் மனதில் இடம்பிடித்த இந்த சீரியலில் தற்போது மனோஜ் புதிதாக பெரிய பங்களா ஒன்றை வாங்கவிருக்கிறார்.
தொழிலதிபராக முன்னேறி வரும் மனோஜ், புதிய வீடு வாங்க வேண்டும் என்கிற கனவில், பல கோடி மதிப்புள்ள பங்களாவை வாங்கவுள்ளார். இதற்காக அட்வான்ஸ் கொடுக்க ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் சென்றுள்ளார்கள்.
பிரச்சனையில் சிக்கப்போகும் மனோஜ், ரோகிணி
கோவிலில் வைத்து வீட்டின் உரிமையாளருக்கு அட்வான்ஸ் கொடுக்க ரோகிணி மற்றும் மனோஜ் செல்ல, அங்கு மீனாவும் அவரது தாயையும் சந்திக்கின்றனர். அப்போது தவறுதலாக அங்கிருந்த தண்ணீர் குடத்தை தட்டிவிடுகிறார் ரோகிணி.
இதை பார்த்த மீனாவின் தாய், 'அவர்கள் வீடு வாங்க போவதாக கூறுகின்றனர், ஆனால், இது நல்ல சகுனமாக தெரியவில்லை' என கூற, மீனா அதிர்ச்சியடைகிறார். மனோஜ் ரோகிணியின் இந்த முடிவால், அடுத்து என்னென்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu
