கங்குவாவை தொடர்ந்து சிறுத்தை சிவாவுக்கு அடித்த ஜாக்பாட்!! இந்திய சினிமாவின் முன்னணி நடிகருடன் படம்
கங்குவா
இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது கங்குவா படத்தை இயக்கி வருகிறார். சூர்யா கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் தான் கங்குவா படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சிறுத்தை சிவா
இந்த நிலையில், கங்குவா படத்திற்கு பின் இயக்குனர் சிறுத்தை சிவா என்ன செய்யப்போகிறார், யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கங்குவா படத்திற்கு பின் பாலிவுட் படத்தை இயக்க போகிறாராம் சிறுத்தை சிவா. ரன்பிர் கபூர் மற்றும் வருண் தவான் ஆகிய இருவரிடமும் இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
பாலிவுட் படத்தை முடித்தபின், மீண்டும் தன்னுடைய ஆஸ்தான ஹீரோ அஜித்துடன் கைகோர்ப்பார் என கூறப்படுகிறது. அப்படம் ஏகே 64ஆக இருக்கலாம் என்கின்றனர். சன் பிச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

தந்தை மீது கொடூர தாக்குதல்.. பெற்ற பிள்ளைகளின் வெறிச்செயல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! IBC Tamilnadu

கல்லூரியில் மோசமான ஆங்கில பேச்சால் கேலி செய்யப்பட்டவர்.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை News Lankasri
