Sisu: Road to Revenge திரை விமர்சனம்
ஹாலிவுட்டில் அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அந்த வகையில் ஜான் விக் போல் ஒரு வயதான தாத்தா இருந்தால் எப்படியிருக்கும் என்ற அதிரடி ஆக்ஷன் களத்தில் வெளிவந்துள்ள சிசு படத்தின் இரண்டாம் பாகம் Sisu: Road to Revenge எப்படி என்பதை பார்ப்போம்.

கதைக்களம்
சிசு என்றால் அழிக்கவே முடியாதவன் என்ற வாய்ஸ் ஓவரில் படம் தொடங்க, ஹீரோ சோவித் யூனியனில் உள்ள தன் வீட்டை தேடி வந்து அங்கு தன் வீட்டை பிரித்து தன் வண்டியில் ஏற்றி பின்லாண்ட் நாட்டிற்கு செல்கிறார்.
அதோடு தன் மனைவி, மகன்களை அங்கிருப்பவர்கள் கொன்றிருப்பார்கள், அந்த கோபத்துடன் பின்லாண்ட் திரும்பும் போது சோவித் யூனியன் ஆட்கள் பின் தொடர்கின்றனர்.
அவன் பின்லாண்ட் போக கூடாது தடுத்து நிறுத்த வேண்டும் என கார், பைக், ப்ளைட் என துரத்த இதிலிருந்து எல்லாம் நாயகன் எப்படி மீண்டார் என்பதன் ஆக்ஷன் அதிரடி தான் இந்த சிசு.

படத்தை பற்றிய அலசல்
நாயகன் ஜோர்மா இந்த வயதிலும் அவர் செய்யும் ஆக்ஷன் காட்சிகள் அடி தூள் தான், நாயகன் குடும்பத்தை கொன்றதோடு அவரையும் கொல்ல வரும் வில்லன் நடிகர் ஸ்டிபன் லாங் அவர் பங்கிற்கு மிரட்டியுள்ளார்.
ஊருக்கு தன் வீட்டு மரக்கட்டைகளை நாயகன் ஜோர்மா கொண்டு செல்லும் போது வில்லன் ஸ்டீபன் கட்டையை போடுகிறார், அங்கு தொடங்குகிறது ஆக்ஷன்.

முதல் ஆக்ஷன் கார் துரத்துகிறது, பிறகு பைக் துரத்துகிறது, அதை தொடர்ந்து ப்ளைட் துரத்துகிறது, இதெல்லாம் முடிந்து இனி என்ன என்று பார்த்தால் ட்ரெயினில் வைத்துள்ளார்கள் பாருங்க ஒரு ஆக்ஷன், படம் முழுவதும் வித்தியாச வித்தியாசமாக எப்படி கொல்வது, உடல்கள் சிதறுவது 200 லிட்டர் இரத்தத்தை கொட்டுவது என இயக்குனர் இதற்காகவே கற்பனை குதிரையை பறக்கவிட்டுள்ளார்.
ஆனால், எல்லாத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது, அழிக்க முடியாதவன் தான் சிசு, அதற்காக புல்லட்-யை வாயில் இருந்து துப்புவது, முதுகு சிதைந்து அடுத்தக்காட்சியே 50 பேரை கொல்லுவது, என யப்பா அராஜகத்தின் உச்சம்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இது படமே இல்லை, 4 லெந்த் ஆக்ஷன் காட்சிகளை ஒட்டி 1.30 மணி நேரமாக கொடுத்துள்ளனர்.
டெக்னிக்கலாக படத்தின் ஒளிப்பதிவு பிரமாதம், அதோடு அடித்தொண்டையில் கத்தும் அந்த BGM மிரட்டல், சிஜி ஒர்க், ஸ்டெண்ட் எல்லாமே டாப் க்ளாஸ் தான்.

க்ளாப்ஸ்
ஆக்ஷன் காட்சிகள், குறிப்பாக கிளைமேக்ஸ் ட்ரெயின் சண்டைக்காட்சி.
டெக்னிக்கல் ஒர்க்
பல்ப்ஸ்
லாஜிக் கண்களை மறைக்கலாம், இங்கு கண்கள் அளவிற்கு தான் லாஜிக்கே உள்ளது.
மொத்தத்தில் எனக்கு கதையெல்லாம் வேண்டாம், சண்டை சும்மா தெறிக்கனும் என்பவர்களுக்கு அறுசுவை விருந்து தான் இந்த சிசு.

புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri