கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன், புதிய படத்திற்காக அவர் வாங்கவுள்ள சம்பளம்!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர். இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
மேலும் இவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாக்டர் திரைப்படம் OTT நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அடுத்து சிவகார்த்திகேயன் டான், அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடிக்கவுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் KV இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 30 கோடியை சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
