நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தமிடும் அவரின் ரசிகை..வீடியோ வெளியிட்டு புகழாரம்!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தன் கரியரை தொடங்கி அதன் பின் மெல்ல மெல்ல சினிமாவுக்குள் நுழைந்து சிறிய வேடங்களை ஏற்று நடித்து அதன் பின் ஹீரோவாக உருவெடுத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களுள் முன்னனியில் இருக்கும் சிவா தனக்கென தனி இடத்தையே தக்கவைத்துள்ளார்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இவருக்கு ரசிகர்படை இருந்தாலும் சிறுவர்களே இவருக்கு அதிக அளவில் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.
தற்போது அப்படி ஒரு தீவிர ரசிகையின் வீடியோ பதிவை தான் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த வீடியோவில் இருக்கும் சிறுமி சிவகார்த்திகேயனின் புகைப்படத்தை வைத்து முத்தமிடும் காட்சிகள் காண்பதற்கே cute ஆக இருக்கிறது.
இந்த அன்பிற்கு ஈடு இனை எதுவுமில்லை❤️❤️❤️❤️பிரதிக்ஷா பாப்பா உனக்கு கோடி முத்தங்கள்???? https://t.co/wxNGI9YsZw
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 15, 2021