குக் வித் கோமாளிக்கு பின்னால் இப்படியெல்லாம் செய்கிறேன்- முதன்முறையாக கூறிய ஷிவாங்கி
குக் வித் கோமாளி 4
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் ஷிவாங்கி. அவரது பெற்றோர்கள் மிகப்பெரிய பாடகர்கள், அண்மையில் அவர்களுக்கு இசைத்துறையில் விருது எல்லாம் கிடைத்தது.
பாடகியாக கலக்கி வந்த ஷிவாங்கி கடந்த 4 வருடங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். கோமாளியாக 3 சீசன்கள் கலக்கிய அவர் 4வது சீசனில் போட்டியாளராக கலக்கி வருகிறார்.
ஷிவாங்கியின் முதல் பதிவு
கோமாளியாக இருந்த போது சமைக்க தெரியாத ஷிவாங்கி இப்போது எப்படி இவ்வளவு தெளிவாக சமைக்கிறார் என ரசிகர்களிடம் ஒரு பேச்சு அடிபட்டு வந்தது.
தற்போது இதுகுறித்து ஷிவாங்கி தனது டுவிட்டரில், குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து நிறைய பேச்சு அடிபடுகிறது.
ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணிநேரம் ஷுட்டிங் தொடங்கும் முன்பே வேலை செய்கிறோம், நான் மட்டும் இல்லை, அனைவருமே அப்படி தான். இந்நிகழ்ச்சிக்காக நிறைய பாடுபடுகிறோம், நாங்கள் எங்களது சிறந்த சமையலை வெளிக்காட்ட நிறைய உழைப்பை போடுகிறோம்.
கோமாளிகளும் ஒரு கெட்டப்பிற்காக அவ்வளவு மெனக்கெடுக்கிறார்கள். நாங்கள் எல்லாம் இவ்வளவு கஷ்டப்படுவது உங்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத் தான்.
இதை ஒரு ஷோவாக பார்த்து மகிழுங்கள். ஒருவரது உழைப்பை உதாசினப்படுத்துவது மிகவும் ஈஸி.
எங்களது உழைப்பைத் தாண்டி அந்த நாள் நன்றாக இருந்தது என்றால் உணவும் சிறப்பாக வரும். அப்படி வரவில்லை என்றால் அது எனக்கான நாளாக இல்லை. ஜாலியாக இருங்கள் என பதிவு செய்துள்ளார்.
Okay….so a lot of confusion since the season has started on how I can cook?I train 6 to 7 hours a day prior the shoot to learn .Not only me. All the cooks there. So much of sacrifice from the daily routine has been done to showcase our best.
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) April 9, 2023
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?- இந்த பட நாயகியா?