சின்ன வயசில் இருந்தே அதை பார்த்தால் பயம்.. சிவாங்கி நடுக்கடலில் செய்த சூப்பரான விஷயம்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பாப்புலர் ஆகி, அதன் பிறகு குக் வித் கோமாளியில் தனது காமெடியால் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தவர் சிவாங்கி. அவரது காமேடியான பேச்சுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் அப்போது இருந்தார்கள்.
அதன் பின் ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவியின் டாப் குக் டூப் குக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சிவாங்கி பங்கேற்று வருகிறார். மேலும் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் சிவாங்கி கிளாமராக வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தண்ணீரை பார்த்தால் பயம்..
இந்நிலையில் தற்போது சிவாங்கி தண்ணீருக்கு அடியில் ஸ்கூபா டைவிங் செய்திருக்கிறார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் அவர், தனக்கு சின்ன வயதில் இருந்தே தண்ணீரை பார்த்தால் பயம் என தெரிவித்திருக்கிறார்.
'என் வாழ்க்கையிலேயே ஸ்கூபா டைவிங் செய்வேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. குழந்தை பருவத்தில் இருந்தே தண்ணீரை பார்த்தால் பயம். அதனால் காற்றிலேயே எப்போதும் இருப்பேன். இன்று நான் செய்ததை நினைத்து நானே பெருமை கொள்கிறேன். தற்போது தண்ணீரும் நானும் சிறந்த நண்பர்கள்' என சிவாங்கி தெரிவித்திருக்கிறார்.
அந்த வீடியோவை நீங்களே பாருங்க.