விஜய் டிவி சிவாங்கியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இவ்வளவா?
சிவாங்கி
பின்னணி பாடகி , நடிகை என பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி வருபவர் சிவாங்கி.
விஜய் டிவியின் இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 7ல் கலந்து கொண்டவர் பின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்க இவர் பேசும் காமெடி வசனங்கள் அனைத்தும் ட்ரெண்ட் ஆனது. இதன் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
அதன் பின், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "டான்" படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் காசேதான் கடவுளடா என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இவ்வளவா?
இந்நிலையில், நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய ஷிவாங்கியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, சிவாங்கி கிருஷ்ணகுமார் பாடகியாக, நடிகையாக சம்பாதிப்பது மட்டுமின்றி இசை கச்சேரிகள் மற்றும் youtube சேனல் மூலமாகவும் அதிகம் சம்பாதிக்கிறார் என கூறப்படுகிறது. இதனால் சிவாங்கியின் Net Worth சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
