புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய குக் வித் கோமாளி ஷிவாங்கி.. நீங்களே பாருங்க
ஷிவாங்கியின் புதிய ஹேர் ஸ்டைல்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவாங்கி. இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கினார்.
மூன்று சீசன்களாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் ஷிவாங்கி. சின்னத்திரையில் பிரபலமான இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் மூலம் வெள்ளித்திரையிலும் நடிகையாக அறிமுகமாகிவிட்டார்.
இப்படத்தை தொடர்ந்து வடிவேலுவுடன் நாய் சேகர் Returns படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி, அடிக்கடி புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன்னுடைய புதிய ஹேர் ஸ்டைல் வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த ஸ்டோரியின் புகைப்படம்..