சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக இவர் தொகுத்து வழங்குகிறாரா?- இதுவரை வராத பிரபலம்
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கொரோனா காலத்தில் சிறியவர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது, நோய் தொற்று பிரச்சனையால் அப்படியே நிறுத்தப்பட்டது.
தற்போது பெரியவர்களுக்கான புதிய சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, அதுவும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.
இந்த சீசனில் ஜெயிக்கப்போவது யார் என்ற கருத்துக் கணிப்புகளும் நிறைய நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் பிக்பாஸ் 5வது சீசனில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கலந்துகொள்கிறார் என செய்தி வந்தது.
அதனை உறுதிப்படுத்துவது போல் புதிய Start Music நிகழ்ச்சியை மாகாபா தொகுத்து வழங்குகிறார். இப்போது இதற்கு மேல் வரப்போகும் சில சூப்பர் சிங்கர் எபிசோடுகளை குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்க இருக்கிறாராம்.
ஷிவாங்கி அதன் ஒரு புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
