Chef தாமு அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ள ஷிவாங்கி- யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்க
கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி முடிந்துவிட்டது. இதனால் போட்டியாளர்களை போல் மக்களும் பெரிய வருத்தத்தில் உள்ளனர்.
இதற்குள்ளே அடுத்த சீசன் எப்போது என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகஸ்டில் 3வது சீசன் தொடங்கலாம் என செய்திகள் வருகின்றன.
போட்டியாளர்கள் நிகழ்ச்சி முடித்த கையோடு அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அண்மையில் அஷ்வின் மற்றும் புகழ் இருவரும் புதுமுக இயக்குனர் படத்தில் ஒன்றாக நடிக்கப்போவதாக பெரிய சந்தோஷ செய்தியை வெளியிட்டனர்.
இந்த நிலையில் தான் ஒரு அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஷிவாங்கி Chef தாமு அவர்களின் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.
அங்கு தாமு அவர்களின் மகளுடன் கியூட் புகைப்படங்களும் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தாமு அவர்களின் மகளே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.