CWCயில் திருமணம் பற்றி பேசிய சிவாங்கி.. இப்படி ஒரு கணவர் தான் வேண்டும்
சிவாங்கி
குக் வித் கோமாளி ஷோவில் முதலில் கோமாளியாக இருந்து அதன் பின் தற்போது நான்காம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார். கடந்த சில வாரங்களாக சிவாங்கி பல இடங்களில் சொதப்பினாலும் எலிமினேஷனில் இருந்து தப்பி தொடர்ந்து போட்டியில் இருந்து வருகிறார்.
இந்த வாரத்தில் எலிமினேஷன் நடைபெறும் என்பதால் போட்டி சற்று கடினமாக மாறி இருக்கிறது. இன்றைய குக் வித் கோமாளி எபிசோடில் ஐஸ் கோலா செய்ய வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை செய்ய முடியாமல் திணறினார் சிவாங்கி.
திருமணம் பற்றி பேசிய சிவாங்கி
ஐஸ் கோலா டாஸ்க் செய்துகொண்டிருக்கும் போது சிவாங்கி திருமணம் மற்றும் குழந்தை பற்றி பேசி இருக்கிறார்.
இன்னும் 5 வருடங்களில் திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என மோனிஷா சொல்ல, 'எனக்கும் அதே ஆசை தான். எனக்கு குழந்தை பிறந்தால் அதை எப்படி வெச்சி மேய்க்குறது?' என கூறினார் சிவாங்கி.
"எனக்கு வரும் புருஷன் calm ஆக ஒழுங்காக இருக்கும் நபராக இருந்தால் நல்லா இருக்கும்" எனவும் சிவாங்கி கூறியுள்ளார்.
சிம்புவின் பத்து தல, நானியின் தசரா.. ஓடிடி ரிலீஸ் தேதி இதோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
