சிவாஜியின் அன்னை இல்லம் பிரபுவுக்கு சொந்தம்.. ஜப்தியை எதிர்த்து ராம்குமார் மனு
நடிகர் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் படம் தயாரிக்க வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனை 30% வட்டி உடன் தற்போது 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ஆக செலுத்தவேண்டும். அதற்கு பதில் ஜகஜால கில்லாடி பட உரிமையை கேட்டார் பைனான்சியர், ஆனால் பட பணிகள் முடியவில்லை என அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது துஷ்யந்த் தரப்பு.
அதன் பின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தான் நீதிமன்றம் ஜப்தி உத்தரவை பிறப்பித்தது.
அது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தது.
ராம்குமார் மனு
சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் தான் துஷ்யந்த். அவருக்கு அன்னை இல்லத்தில் எந்த பங்கும் இல்லை, அந்த வீடு முழுக்க முழுக்க பிரபுவுக்கு சொந்தமானது என ராம்குமார் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறது.
சிவாஜியின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார். இதனை தொடர்ந்து ஜப்திக்கு ஏதிராக மனு தாக்கல் செய்ய நீதிபதி ஒப்புதல் அளித்திருக்கிறார்.