பெண் வேடத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்று
தமிழ் திரையுலகில் நடிப்பிற்கு உதாரணமாக முதலில் கூறுவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை தான்.
இவர் நடிப்பில் வெளியான தில்லானா மோகனாம்பாள் முதல் பாசமலர் வரை பல திரைப்படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.
1952ஆம் ஆண்டு துவங்கிய இவரது திரையுலக பயணம் 1999ஆம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தில் முடிந்தது.
சிவாஜியுடன் இணைந்து ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
நடிகர் சிவாஜியை பல திரைப்படங்களில் வெவ்வேறு கெட்டப்பில் நாம் பார்த்து ரசித்திருப்போம்.
இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பலரும் இதுவரை பார்த்திராத அந்த புகைப்படம் இதோ..