இந்த புகைப்படத்தில் இருக்கும் மாபெரும் நட்சத்திர நடிகர் யார் தெரியுமா! இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த மாபெரும் கலைஞரின் இளம் வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அவர் வேறு யாருமில்லை நடிகர் திலகம் சிவாஜி கணேஷ்தான். ஆம், சிவாஜி அவர்கள் தனது இளம் வகையில் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம்தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.
சிவாஜி
நடிப்புக்கு இலக்கணமாக இன்று வரை தமிழ் சினிமாவில் திகள்பவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கிய இவர், அதன்பின் தொட்டது எல்லாமே வெற்றியின் வசமானது.
சிவாஜி கணேசன் போல் ஒரு காட்சியாவது நடித்துவிட மாட்டோமா என ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் ஏங்கி இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட மாபெரும் கலைஞன் இன்று நம்முடன் இல்லை என்றாலும், அவருடைய நடிப்பு என்றுமே நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
இன்று நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் 24வது நினைவு நாள். இன்றைய நாளில் அவர் சினிமாவில் செய்த சாதனைகள் குறித்து பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.