நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.. பிரபல நடிகையா இவர்

Kathick
in பிரபலங்கள்Report this article
வைரல் புகைப்படம்
திரையுலகில் நடிப்புக்காக எடுத்துக்காட்டு கூற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை தான் கூறுவார்கள். இவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதை கவர்ந்த ஒன்றாகும்.
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அல்லது இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் சிவாஜியுடன் பிரபல நடிகை ஒருவர் சிறு வயதில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இவர் தான்
அவர் வேறு யாரும் இல்லை நடிகை வனிதா விஜயகுமார் தான். ஆம் வனிதாவின் முதல் பிறந்தநாள் அன்று சிவாஜியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது. வனிதா விஜயகுமார் தனது இளம் வயதில் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை வனிதா தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.