'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு
நடிகர் பிரபுவின் அண்ணன் ராம்குமார் குடும்பம் வாங்கிய கடனுக்காக அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய வேண்டும் என சில வாரங்களுக்கு முன்பு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் ராம்குமாருக்கு அந்த வீட்டில் உரிமை இல்லை, அன்னை இல்லம் தனக்கு தான் முழுமையாக சொந்தம் என நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்தார். அந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 150 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தனது அண்ணன் வாங்கிய கடனை பிரபுவே திருப்பி கட்டிவிட்டு, அதன் பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே என நீதிபதி கேட்டதற்கு, 'அவர் பலபேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அவருக்கெல்லாம் என்னால் உதவ முடியாது' என பிரபு கூறி இருந்தார்.
நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் அன்னை இல்லத்தில் தனக்கு எந்த உரிமையும் இல்லை, இனிமேலும் கோர மாட்டேன் என ராம்குமார் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
மேலும் விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.