சிவாஜி படத்தில் ரஜினி நிறத்தை மாற்றியது இப்படி தான் ! முதல்முறையாக முக்கிய பிரபலம் வெளியிட்ட புகைப்படம்..
சிவாஜி படத்தில் பயன்படுத்திய தொழில்நுட்பம்
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை ஆக்கிரமித்தவர்கள் நடிகர் ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர், இவர்களின் திரைப்படங்கள் எப்போதும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று சாதனை படைப்பது வழக்கம்.
அப்படியான இவர்கள் இருவரும் முதல்முறை இணைந்து வெளியான திரைப்படம் சிவாஜி, கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான அப்படம் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த வசூல் சாதனைகளையும் முறியடித்து Industry hit திரைப்படமாக அமைந்தது.
அந்த வகையில் மாபெரும் வெற்றியடைந்த சிவாஜி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 வருடங்கள் ஆகிவிட்டன. இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அப்படத்தில் பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் மோகன் சிவாஜி படத்தில் ரஜினி நிறத்தை மாற்ற Digital Skin Grafting என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
அப்படத்தில் நிறைய காட்சிகளில் ரஜினியை அச்சு அசல் வெள்ளை நிறமாகவே காண்பித்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Digital Skin Grafting #15yearsofSivaji @shankarshanmugh @rajinikanth @avmproductions @arrahman #KVAnand @Vairamuthu #Vaali @editoranthony #ActorVivek @shriya1109 @PeterHeinOffl
— Srinivas Mohan (@srinivas_mohan) June 15, 2022
@arunaguhan_ pic.twitter.com/GJ4vxFX5rh
திடீரென நடிகர் ரஜினியை நேரில் சந்தித்த இயக்குநர் ஷங்கர், என்ன காரணம் தெரியுமா?