சிவகுமாரின் சபதம் திரைவிமர்சனம்
இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் ஒரு இயக்குநராகவரும் தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் ஹிப் ஹாப் ஆதி. மீசையமுறுக்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், மீண்டும் சிவகுமாரின் சபதம் படத்தை இயக்கி, நடித்துள்ளார். இளம் ரசிகர்கள் மத்தியில், அதிகளவில் எதிர்பார்ப்பில் இருந்த சிவகுமாரின் சபதம் படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா..? இல்லையா..? வாங்க பார்க்கலாம்.
கதைக்களம்
காஞ்சிபுரத்தில் வசித்து வரும் வரதராஜன் என்பவர் நெசவு தொழிலை தனது பரம்பரை தொழிலாக தொடர்ந்து செய்து வருகிறார். தனது தாத்தா வரதராஜன் போலவே நெசவு செய்யவில்லை என்றாலும், பட்டுப்புடவையை விற்கும் தொழிலில் ஈடுபாட்டுடன் இருக்கிறார் கதாநாயகன் சிவகுமார் { ஹிப் ஹாப் ஆதி }.
சிவகுமாரின் சித்தப்பாவாக வரும் முருகன் { prankster ராகுல் }, சிறு வயதில் இருந்தே தனக்கு அதிகமாக பாசம் கிடைக்காத காரணத்தினால், இளம் வயது வந்தவுடன், தான் காதலித்து பெண்ணை திருமணம் செய்துகொண்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறார். இது ஒரு புறம் இருக்க, திடீரென ஹிப் ஹாப் ஆதிக்கு ஏற்படும் பிரச்சனையால் அவரும், அவருடைய நண்பனும், தாத்தா வரதராஜனும் போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள்.
இவர்களை காப்பாற்ற, மிகப்பெரிய தொழிலதிபர் சந்திரசேகரின் மருமகனாக மீண்டும் என்ட்ரி கொடுக்கும் prankster ராகுல், இனி சிவகுமார் காஞ்சிபுரத்தில் இருந்தால் வாழ்க்கையில் உருப்பிடமாட்டான் என்று நினைத்து, சிவகுமாரை தன்னுடன் தனது மாமா வீட்டிற்கு அழைத்து சென்று விடுகிறார். அங்கே, தனது பழைய காதலியை சந்திக்கும் சிவகுமாருக்கு மீண்டும் காதல் மலர்கிறது.
ஹீரோவும், ஹீரோயினும் ஒன்றாக ஊரை சுற்றி கொண்டு இருப்பதை பார்க்கும் ஹீரோயினின் மாமன், சிவகுமாரை அடிக்கிறார். இதனால் கோபமடைந்த முருகன் { prankster ராகுல் }, தனது மனைவியின் தம்பி என்று கூட பார்க்காமல் செய்யும் விஷயத்தினால், மிகப்பெரிய பிரச்சனையில், சிவகுமாரும், prankster ராகுலும் சிக்கிக்கொள்கிறார்கள். அப்போது தனது சித்தப்பாவிற்காக சிவகுமார் சபதம் போடுகிறார். அந்த சபதத்தில் சிவகுமார் ஜெயித்தாரா..? இல்லையா..? வரதராஜனின் நெசவு தொழில் சிவகுமாரால் காப்பாற்ற பட்டதா..? இல்லையா..? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
எப்போதும் போல் இளம் ரசிகர்களை கவரும் வகையில் கலகலப்பாக நடித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. கதாநாயகனுக்கு நண்பனாக வரும் கதிர் நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இத்தனை நாட்கள் youtube-ல் Prank செய்துவந்த ராகுல், சிவகுமாரின் சபதம் படத்தின் மூலம் நடிராக அறிமுகமாகியுள்ளார். முதல் படமாக இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார்.
தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார் கதாநாயகி மாதுரி. அதே போல், வரதராஜன் கதாபாத்திரமும் படத்திற்கு பலத்தை சேர்க்கிறது. சில இடங்களில் காமெடி நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தாலும், பல இடங்களில் சிரிப்பு வரவில்லை. கமெர்ஷியல் படமாக இருந்தாலும், நன்றாக நகரும் கதையை சில பாடல்கள் கெடுத்துவிடுகிறது.
நெசவு தெழிலாளிகளின் வழியை அனைவருக்கும் தெரியவைக்க வேண்டும் என்று நினைத்த ஹிப் ஹாப் ஆதிக்கு பாராட்டுக்கள். ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. ஹிப் ஹாப் ஆதியின் இயக்கும் ஓகே.
க்ளாப்ஸ்
கதைக்களம்
ஹிப் ஹாப் அதி, கதிர் மற்றும் Prankster ராகுலின் நடிப்பு
பின்னணி இசை
பல்ப்ஸ்
திரைக்கதை கொஞ்சம் போர்
பாடல்கள்
மொத்தத்தில் தன் நடிப்பு பயணத்தில் சறுக்கலை சந்தித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி
2.5 / 5