திடீரென ஞானவேல் ராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்- பரபரப்பு தகவல்
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் படங்கள் வெளியானாலே பெரிய நடிகர்கள் அளவிற்கு கொண்டாடப்படுகிறது.
நடிகரின் படங்கள்
கடைசியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெளியாகி செம வசூல் வேட்டை நடத்தியது, அந்த வருடத்தின் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் இடம்பெற்றது. அடுத்ததாக டான் திரைப்படம் தயாராகியுள்ளது, படத்திற்கான ரிலீஸ் தேதிக்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங்.
இந்த கொரோனாவில் இருந்து எந்த படங்களும் முதலில் குறித்த தேதியில் வெளியாவதில்லை.
வழக்கு தொடர்ந்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இப்படம் பெரிய அளவில் ரீச் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியது.
இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். ஆனால் இப்படத்திற்கான சம்பள பாக்கி ரூ. 4 கோடியை அவர்கள் இன்னும் கொடுக்கவில்லை, வாங்கி தர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
Mr Local படத்திற்கான ரூ. 15 கோடி சம்பளத்தில் ரூ. 11 கோடி மட்டுமே கொடுத்துள்ளதாகவும் பாக்கியை தர கோரியுள்ளார். அதுவரை சிம்பு மற்றும் விக்ரம் படங்களை ரிலீஸ் செய்ய உத்தரவிடக் கூடாது என்றும் அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார் நடிகர்.
மார்ச் 31ல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டு பெண்ணுடன் கைக்கோர்த்த தனுஷ், இது லிஸ்ட்டிலேயே இல்லையே..