10 வருடத்திற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்ட பதிவு ! மாபெரும் வளர்ச்சியை கொண்டாடும் ரசிகர்கள் !
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் அடுத்து டான் திரைப்படம் வெளியாகவுள்ளது, ஆனால் அறிவிக்கப்பட்டது படி மார்ச் 25 வெளியாகுமா என்பது சந்தேகமே.
இந்நிலையில் தற்போது கடந்த 2012 ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி சிவகார்த்திகேயன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் "மெரினா படத்தின் ரீல்ஸ் தயாராகவுள்ளது" என அவரின் அறிமுகம் படம் குறித்து பதிவிட்டுள்ளார்.
மேலும் இப்பொது சிவகார்த்திகேயன் தான் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருந்து வருகிறார், இவரின் இந்த 10 வருட வளர்ச்சியை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Marina prints ready :) fingers crossed:)))) pic.twitter.com/e6hGV2uB
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 2, 2012