சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்கப்போகும் சூப்பர்ஸ்டார்.. இது செம மாஸ் கூட்டணி
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் தற்போது பராசக்தி மற்றும் மதராஸி ஆகிய படங்கள் உள்ளன. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் தனது 24வது திரைப்படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
இவருடைய 24வது திரைப்படத்தை இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2023ம் ஆண்டு குட் நைட் எனும் வெற்றிப்படத்தை கொடுத்தவர்.
இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இது தந்தை மகன் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்றும் கூறப்படுகிறது.
செம மாஸ் கூட்டணி
இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லாலை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மோகன்லால் இதற்கு முன் விஜய்க்கு தந்தையாக தமிழில் வெளிவந்த ஜில்லா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.