தலைசுற்றவைக்கும் சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பட்ஜெட்.. 500 கோடி வசூல் செய்யுமா
சிவகார்த்திகேயன் 25வது படம்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23வது படம் உருவாகி வரும் நிலையில், தன்னுடைய 25வது படத்திற்கான அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இயக்குனர் சுதா கொங்கராஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
மேலும் இப்படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார். நேற்று இப்படத்திற்கான பூஜை நடந்து, அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
பட்ஜெட்
இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 250 கோடி என சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் அதிக செலவில் எடுக்கப்படும் திரைப்படம் இதுவே ஆகும். அமரன் ரூ. 340 கோடி வசூல் செய்த நிலையில், சிவகார்த்திகேயன் 25வது படம் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூலை குவிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.