அது மிகவும் கடினம் என்னால் முடியாது.. அலறும் சிவகார்த்திகேயன்! எதற்கு தெரியுமா
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராகவும், வசூல் நாயகனாகவும் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன், உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக முதன் முதலாக சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது.
ராணுவ கதைக்களத்தை மையமாகக் கொண்டு இந்த படம் வெளியான நிலையிலும் முகுந்த் மற்றும் அவரது மனைவி இந்துவின் காதல் காட்சிகள் படத்தில் மிகச் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.
எதற்கு தெரியுமா
இந்நிலையில், அமரன் படத்திற்கான பிரமோஷனில் சிவகார்த்திகேயன் இயக்கம் குறித்தும் அவர் உதவி இயக்குனராக இருந்தது குறித்தும் பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
அதில், "நான் முன்பு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தேன், சினிமாவில் நடிப்பதை காட்டிலும் இயக்கம் மிகவும் கடினமான ஒன்று.
ஒரு இயக்குனராக இருப்பதற்கு பொறுமை மிகவும் முக்கியம். அது போன்று தான் ஸ்கிரிப்ட் ரைட்டிங்கும் மிகவும் கடினமான விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
