அமரன் வெற்றி விழா.. மேடையில் கண்கலங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்

Bhavya
in பிரபலங்கள்Report this article
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறியுள்ளது அமரன். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.
மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடித்துள்ளார். வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படம் வசூல் ரீதியாகவும் மாஸ் காட்டி வருகிறது.
இந்நிலையில், நேற்று அமரன் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் தன் அப்பா குறித்து உருக்கமாக பல விஷயங்களை பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயன் உருக்கம்
அதில், " நான் அமரன் படத்தில் நடித்ததற்கு மிக முக்கிய காரணம் என் அப்பா தான். அவர் ஒரு சிறை கண்காணிப்பாளராக இருந்தவர். தன் பணியில் மிகவும் நேர்மையானவராக வலம் வந்தவர்.
கடந்த 21 ஆண்டுகளாக அவருடைய நினைவில் மட்டும் தான் நான் வாழ்ந்து வருகிறேன். ஆனால் இந்த படம் மூலம் அவரை மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
முகுந்த் போன்று தான் என் தந்தையும். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடந்தது போன்று தான் என் வாழ்க்கையிலும் நடந்தது. என் அம்மா மற்றும் அக்காவுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். தற்போது இந்த படத்தில் நடித்து அதை பூர்த்தி செய்து விட்டேன்" என்று கூறியுள்ளார்.
]

விசா இருந்தும் தடுப்புக்காவல்! பாரிஸில் ஊழியருக்கு நடந்தது வெட்கக்கேடானது..ரஷ்யா கண்டனம் News Lankasri
