நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம்.. சிவகார்த்திகேயனிடம் திருமணம் குறித்து பேசிய அவருடைய தாய்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த மாவீரன் திரைப்படம் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக அயலான் வெளிவரவுள்ளது.
இப்படத்தை எதிர்பார்த்து தான் ஒட்டுமொத்த சிவகார்த்திகேயன் ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் தனது மாமன் மகளான ஆர்த்தி என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
சின்னத்திரையில் பணிபுரிந்து வரும் நேரத்திலேயே இவருடைய திருமணம் நடந்துவிட்டது. இந்த ஜோடிக்கு ஆராதனா, குகன் தாஸ் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம்
இந்நிலையில் திருமணம் ஆன நேரத்தில் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் கொடுத்த பேட்டியின் வீடியோ க்ளிப்பிங் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் 'நம்முக்கு இப்போது தான் 21, 22 வயது ஆகிறது அப்படியே காதலிச்சு கல்யாணம் பண்ணலாம்னு இருந்தேன். ஆனா அதெல்லாம் நீ ஒன்னும் பண்ணி கிழிக்க வேண்டாம், உன்னுடைய மாமன் பொண்ணையே திருமணம் பண்ணிக்கோ-னு சொல்லிட்டாங்க' என நகைச்சுவையாக கூறியிருப்பார்.
இதோ அந்த வீடியோ..
cute pair sivakarthikeyan Aarthi ?? pic.twitter.com/aqIDGSOPt3
— LEO ? வெற்றி (@Vetri_Maaraan) December 23, 2023

சனி பெயர்ச்சி 2025..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் - உங்க ராசி இருக்கா தெரிஞ்சுக்கோங்க! IBC Tamilnadu
