ரிலீஸ் ஆன மதராஸி, தனது அடுத்தடுத்த பட இயக்குனர்கள் குறித்து கூறிய சிவகார்த்திகேயன்... இதோ லிஸ்ட்
மதராஸி
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் அமரன் திரைப்படம் வெளியாகி இருந்தது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இப்படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகி வெளியாகி இருந்தது.
அப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் மதராஸி. தற்போது வரை படம் ரூ. 70 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
அடுத்த படங்கள்
இப்படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார், படத்திற்கான படப்பிடிப்பு இலங்கை, சென்னை என மாறி மாறி நிறைய இடங்களில் நடக்கிறது.
அடுத்து சிபி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறேன், அந்த படம் எப்படி வரப்போகிறது என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.
அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறேன், புஷ்கர் காயத்ரி படம் குறித்து தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
