இது அண்ணன் - தம்பி பொங்கல்.. ஜனநாயகம் - பராசக்தி ரிலீஸ் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்
இசை வெளியீட்டு விழா
நேற்று பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசிய சிவகார்த்திகேயன், ஜனநாயகன் - பராசக்தி படத்தின் ரிலீஸ் குறித்தும் பேசினார்.
சிவகார்த்திகேயன் பேச்சு
அப்போது, "நாங்க முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். அப்போ, விஜய் சார் படம் தீபாவளிக்கு ரிலீஸ்-னு லாக் பண்ணிட்டாங்க. அதனால் நாங்க பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண பிளான் பண்ணி ஒர்க் பண்ணோம்.

ஆனால் திடீரென விஜய் சார் ஜனநாயகன் பொங்கலுக்கு வருதுனு சொன்னதும் நான் உடனே ஜர்க் ஆகிட்டேன் தயாரிப்பாளர் ஆகாஷ் ப்ரோக்கு call பண்ணேன், விஜய் சார் படம் பொங்கலுக்கு வருது, நம்ம ஏதாவது பண்ண தேதியை முன்ன பின்ன மாத்தலாமான்னு சொன்னேன். investors எல்லாருக்கும் பொங்கல் ரிலீஸ்-னு சொல்லிட்டோம். தேதியை மாற்றினால் பண்ண சம்மருக்குதான் பண்ணனும், அப்போ தேர்தல் இருக்குனு சொன்னாரு. அதன்பின் எனக்கு ஒரே குழப்பமா இருந்தது.
உடனே விஜய் சார் மேனேஜர் ஜெகதீஷ் ப்ரோக்கு கால் பண்ணி பேசினேன். என்ன ப்ரோ ஜனநாயகம் பொங்கலுக்கு வருது, பராசக்தியும் அப்போதான் வருதுனு சொன்னேன். இதுல என்ன ப்ரோ பொங்கலுக்கு ஈஸியா ரெண்டு படம் வரலாம். உங்களுக்கு பிரச்சனை இல்ல, எனக்குதான் பிரச்சனை, விஜய் சாரோட கடைசி படம் வேற என்று சொன்னேன். நீங்க விஜய் சார் கிட்ட ஒரு வார்த்தை பேசிருங்கனு சொன்னேன். அதெல்லாம் ஒன்னும் இல்லை சூப்பரா பொங்கலுக்கு வரட்டும், நீங்க SK கிட்ட என்னோட வாழ்த்துக்களை சொல்லுங்க னு விஜய் சார் சொல்லிருக்காரு.

ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல்
மேன்மக்கள் மேன்மக்களே, 33 வருடம் ஒருத்தரு நம்ம எல்லாரையும் என்டர்டைன் பண்ணிருக்காரு. சோ, ஜனவரி 9ஆம் தேதி எல்லாரும் ஜனநாயகன் பார்த்து கொண்டாடுங்க. ஜனவரி 10ஆம் தேதி பராசக்தி பார்த்து கொண்டாடுங்க. இன்னும் கூட சொல்றேன். யார் என்ன வேணாலும் சொல்லட்டும் இது அண்ணன் - தம்பி பொங்கல்தான்.