விஜய் ரசிகர்களை பற்றி சிவகார்த்திகேயன் பதில்! சுதா கொங்கரா பேச்சு சர்ச்சையான பின் விளக்கம்
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்திகேயன் நடித்த பராசக்தி ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக ஜனநாயகன் ரிலீஸ் ஆகாமல் போனது.
பராசக்தி படம் திட்டமிட்டபடி ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகி சுமாரான வரவேற்ப்பை மட்டுமே பெற்று இருக்கிறது. படத்திற்கு எதிராக விஜய் ரசிகர்கள் ரவுடியிசம் செய்வதாக பராசக்தி இயக்குனர் சுதா கொங்கரா பேசி இருப்பதும் சர்ச்சை ஆகி இருக்கிறது.

சிவகார்த்திகேயன் பதில்
பாஜக நடத்திய பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றார் சிவகார்த்திகேயன். அப்போது செய்தியாளர் ஒருவர் விஜய் ரசிகர்களால் தான் பராசக்திக்கு பாதிப்பா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் "ஒரு சில ரசிகர்கள் பேசுவதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. அதை generalize செய்யவும் விரும்பவில்லை. சிலர் பேசுவார்கள். ஆனாலும் நாங்கள் சகோதரர்கள் போல தான். அப்படியே தான் இருப்போம்" என தெரிவித்து இருக்கிறார்.
Anchor Questions that @actorvijay fans are spreading negativity on #Parasakthi❓#SivaKarthikeyan: We don't want to worry about a few fans talking about & we don't want to generalise it also🤝. We are always like brothers & it remains the same♥️pic.twitter.com/QypIjVVqgR
— AmuthaBharathi (@CinemaWithAB) January 14, 2026