15 வருடங்கள் முன்பே அஜித்துடன் நடித்த சிவகார்த்திகேயன்! இது தெரியுமா.. போட்டோவுடன் இதோ
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருக்கிறார். காமெடி கலந்த நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரையும் அவர் கவர்ந்து வருகிறார்.
அவர் நடித்த அயலான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன நிலையில் அடுத்து SK 21 படத்தில் மிலிட்டரி மேன் ஆக நடித்து வருகிறார். அதற்காக அவர் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவும் வெளியாகி இருந்தது. நாளை மாலை அந்த படத்தின் டீசரும் வெளியாக உள்ளது.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சிவா கூட்டணி சேர்ந்து இருக்கிறார். அந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
அஜித் உடன் நடித்த படம்
சிவகார்த்திகேயன் டிவியில் இருந்து சினிமாவில் ஹீரோவாக வளர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி சிவகார்த்திகேயன் ஆரம்பகாலத்தில் படங்களில் சின்ன ரோல்களில் எல்லாம் நடித்து இருக்கிறார்.
அஜித் - நயன்தாரா நடிப்பில் 2008ல் வெளிவந்த ஏகன் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு காட்சியில் மட்டும் அஜித் உடன் நடித்திருப்பார்.
அந்த போட்டோ இதோ..

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
