அதிதி ஷங்கரின் இரண்டாவது படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை.. சிவகார்த்திகேயனுக்கு இப்படியொரு நிலைமையா
அதிதி ஷங்கர்
இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் அதிதி ஷங்கர்.
பிரச்சனையில் சிவகார்த்திகேயனின் மாவீரன்
மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்குகிறார். அண்மையில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்தது. இப்படத்திற்காக நடிகை அதிதி ஷங்கருக்கு ரூ. 25 லட்சம் சம்பளம் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் துவங்கியது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ஃபைனான்ஷியல் பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நின்றுபோய்யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இந்த ஃபைனான்ஷியல் பிரச்சனை முடிந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தெரியவந்துள்ளது.