சிங்கத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் செய்துள்ள விஷயம்- பாராட்டும் மக்கள்
நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் உள்ள இளம் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர்.
எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் சின்னத்திரையில் நுழைந்து வெற்றிகள் பல கண்டு இப்போது வெள்ளித்திரையின் முக்கிய நாயகனாக வலம் வருகிறார்.
நடிகர்கள் பலரின் பட விழாக்களில் இவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். அண்மையில் நடந்த மாமன்னன் பட நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டிருந்தார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது, அந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

சிங்கம் தத்தெடுப்பு
இப்போது சிவகார்த்திகேயன் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. அதாவது அவர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரூ என்ற ஆண் சிங்கத்தை 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளாராம்.
இதற்கு முன்பும் ஒரு விலங்கை சிவகார்த்திகேயன் சில மாதத்திற்கு தத்தெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமண காட்சி TRP ரேட்டிங்கில் செம மாஸ்- புதிய சாதனை