என்னது சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் சிம்புவா?- என்ன விஷயம், வெளிவந்த தகவல்
அமரன் படம்
ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்போது தயாராகியுள்ள படம் அமரன்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ளார்கள்.
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த கதையில் மேஜர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், இன்று ரெபேக்கா வர்கீஷ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்திருக்கின்றனர்.

இசை வெளியீடு
அமரன் திரைப்படம் சூப்பராக தயாராகியுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு குறித்த தகவல் வந்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீடு எப்போது நடக்கும் என தகவல் வெளியாகவில்லை, ஆனால் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
கமலுடன், சிம்பு தக் லைப் படத்தில் நடித்திருப்பதால் அவர் தயாரிக்கும் படத்தின் விழாவிற்கு சிம்பு வருகிறார் என சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்திருக்கிறது.

லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri