விஜய்யின் வாரிசு பட சாதனையை முறியடித்து முந்திய சிவகார்த்திகேயனின் அமரன்.. முழு பாக்ஸ் ஆபிஸ்
அமரன் படம்
நடிகர் சிவகார்த்திகேயன், எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது முயற்சியால் சின்னத்திரையில் முதலில் களமிறங்கி சாதனை செய்து வந்தார்.
அதில் அவர் தனது 100% உழைப்பை போட அவரது திறமைக்கு வெள்ளித்திரைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
இப்போது அவரது திரைப்பயணத்தில் அவர் மறக்கவே முடியாத அளவிற்கு சாதனை படைத்த படமாக அமைந்துள்ளது அமரன் திரைப்படம்.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்
நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்துவரும் சிவகார்த்திகேயனின் அமரன் படம் முன்னணி நடிகர்களின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்து வருகிறது.
உலகம் முழுவதும் ரூ. 300 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்து விஜய்யின் வாரிசு பட முழு சாதனையை முறியடித்துள்ளது.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri