கவுதம் மேனன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்.. முதல் முறையாக இணையும் கூட்டணி
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் கவுதம் மேனன்.
இவர், தமிழ் திரையுலகிற்கு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். கவுதம் மேனன் தற்போது 'வெந்து தணிந்தது காடு' எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கவுள்ள படத்தில், முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவே, இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் முதல் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள, டாக்டர் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu