தன் பட இயக்குனரின் கலந்துகொண்டு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்- கலக்கல் புகைப்படம் இதோ
தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் என்றால் கண்டிப்பாக எந்த ஒரு தவறான காட்சியும் இருக்காது, குழந்தைகளும் பார்க்கலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
அவர் படங்கள் தேர்வு செய்து நடிப்பது அப்படிதான். ஒரு கிராமத்து பின்னணியில் கொண்ட படம் என்றால் அடுத்து ஏதாவது முக்கிய விஷயத்தை பற்றி பேசும் படமாக இருக்கும்.
டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியானது, அவரது திரைப்பயணத்திலேயே அதிகம் வசூலித்த படமாக அமைந்துள்ளது, அடுத்து டான் படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
இந்த நேரத்தில் தான் சிவகார்த்திகேயன், இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் திருமணத்திற்கு சென்று ஜோடியை வாழ்த்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிவ் வெளியாகி இருக்கிறது.
கார்த்திக் வேறகோபால் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தை இயக்கியவர், அப்படத்தை தயாரித்தது சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.